தொழிலதிபர் தூக்கு போட்டு தற்கொலை

புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார். தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார்
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை கொசப்பாளையம் சாத்தானி வீதியை சேர்ந்த தயாளராஜன். இவரது மகன் சுப்பிரமணி வக்கீலுக்கு படித்துள்ளார்.

தனது தந்தையுடன் இணைந்து தொழில் செய்து வந்தார். இவருக்கு 7 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமாகி யோகபிரியா என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர்.

இதனிடையே கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவால் இவரது தாய்-தந்தை இருவரும் அடுத்தடுத்து இறந்து போனார்கள். அந்த சோகத்தை மறக்க முடியாமல் சுப்பிரமணி குடிபழக்கத்திற்கு ஆளாகினார். 

அடிக்கடி நண்பர்களுடன் வெளியில் சென்று குடித்து வந்தார். மனைவி தட்டிக்கேட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டி வந்தார். இந்த நிலையில், நேற்று மதியம் சுப்பிரமணி வீட்டில் இருந்து புறப்பட்டு சென்று நண்பர்களுடன் மது குடித்தார். மாலை 6 மணிக்கு திரும்ப வந்த அவர் மனைவியிடம் பணம் கொடுத்து ஜவுளி வாங்கிக்கொள்ளுமாறு கூறினார்.

உடனே யோகப்பிரியா ஜவுளி எடுக்க கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு வந்தார். இதனிடையே மது போதையில் இருந்த சுப்பிரமணி வலிப்பு ஏற்பட்டு சாலையிலேயே விழுந்து கிடந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சுப்பிரமணி மனைவியிடம் சாப்பாடு கேட்டார். உடனே யோகபிரியா சாப்பாடு வாங்க வெளியில் சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்தபோது சுப்பிரமணி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com