புதுவை தலைமை செயலகத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம்

தேர்தல் முடிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமமையில் அமைந்துள்ளது.
புதுவை தலைமை செயலகத்தில் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் பட்ஜெட் ஆலோசனை கூட்டம்
Published on

புதுவை சட்டசபையில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் குறுக்கிட்டதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத நிர்வாக செலவினங்களுக்கு ரூ.5ஆயிரத்து 396 கோடிக்கான இடைக்கால பட்ஜெட்டை மார்ச் மாதம் முதல்-அமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்தார்.

தேர்தல் முடிந்து மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமமையில் அமைந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் முழுமையான பட்ஜெட் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இதற்கான ஆலோசனைக்கூட்டம் தலைமை செயலக கருத்தரங்கு அறையில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், எதிர்கட்சித்தலைவர் நாஜிம், தலைமை செயலர் சரத் சவுகான் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் முழுமையான பட்ஜெட் தொகை நிர்ணயம், புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டடங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com