பி.எஸ்.சி. விவசாய படிப்புக்கு கலந்தாய்வு

புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணை ப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இளநிலை நீட் அல்லாத தொழில்முறை படிப்பான பி.எஸ்.சி. விவசாய படிப்பில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.

இதேபோல காரைக்கால் பொறியியல் கல்லூரி, மாகி, ஏனாம் அரசு கலைக்கல்லூரியிலும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com