ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம்

ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது. பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த காட்சி.
மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் சார்பில் ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

மணக்குள விநாயகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.

ஊர்வலத்தை, ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி ஐஸ்வர்யா, டாக்டர்கள் ஜமுனாஸ்ரீ, ஷீலா தொடங்கி வைத்தனர். ஊர்வலத்தில் மணக்குள விநாயகர் பாலி டெக்னிக் கல்லூரி என். எஸ்.எஸ்.மாணவ,மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் சுகாதார நிலைய உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

ஊர்வலம் திருபுவனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ். அலுவலர் வேலழகன் செய்திருந்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com