பாதாள கழிவுநீர் குழாய்களின் அடைப்புகளை சீரமைக்க வேண்டும்

ய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.
வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியதை  நேரு எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி. 
வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியதை  நேரு எம்.எல்.ஏ. பார்வையிட்ட காட்சி. 
Published on

புதுச்சேரி:

உருளையன்பேட்டை குளத்துமேடு வார்டு பகுதியான செயின்தெரேசா வீதி, குளத்துமேடு வீதி, நீடராஜப்பையர் வீதி ஆகிய பகுதிகளில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது.

தகவல் அறிந்த நேரு எம்.எல்.ஏ. அந்த பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். மழை நீர் எளிதாக வெளி யேறும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரி பாதாள கழிவுநீர் தொட்டி குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்ய கேட்டு கொண்டார். அதிகாரிகள் உடனடியாக சீரமைப்பதாக உறுதி அளித்தனர்.

ஆய்வின்போது உள்ளாட்சித் துறை இயக்கு னர் சக்திவேல், பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் உமாபதி, நகராட்சி ஆணையர் சிவகுமார், நகராட்சி செயற்பொறி யாளர் சிவபாலன், உதவி பொறியாளர்கள் பன்னீர் செல்வம், நமச்சிவாயம் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com