அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் கொண்டாட்டம்

நலத்திட்ட உதவி வழங்கப்பட்டதுபா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் ஆளுயர மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு உருளையன் பேட்டை தொகுதியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மோடி மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் பிரபு தாஸ் ஏற்பாட்டில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் பா.ஜனதாவினர் வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவி பத்மாவதி என்ற நாகம்மாள் முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டா டினார். அவருக்கு ஆளுயர மாலை மற்றும் மலர்களால் ஆன கிரீடத்தை பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 பெண்க ளுக்கு புடவைக ளையும் அமைச்சர் நமச்சி வாயம் மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் வழங்கினர்.

விழாவில் மாநில சிறப்பு அழைப்பாளர் சாம்ராஜ், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் முன்னாள் கவுன்சிலர் ராஜன், ஜெயபிரகாஷ் நாராயணன், மாநில மகளிர் அணி பொரு ளாளர் தேன்மொழி, மாநில பிரச்சார பிரிவு இணை அமைப் பாளர் கிரிஜா, நகர மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவி லட்சுமி, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் திருவெற்றிவேல், நகர மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் கீதா, தொகுதி முன்னாள் தலைவர் சக்திவேல், தொகுதி பொதுச் செயலாளர்கள் மதன் ராஜேந்திரன், தொகுதி துணை தலைவர் பாபு, பொரு ளாளர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் அப்பு, பிரவீன், ஆகாஷ், பிரிவு நிர்வாகிகள் முருகன், ராஜா, நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் உமாபதி, ஓ.பி.சி. நிர்வாகி முகுந்தன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com