வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினர் மோதல்

வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வாணரப்பேட்டையில் வட்டிக்கு பணம் கொடுத்து வசூல் செய்து கொடுப்பதில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுவை வாணரப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவரது மனைவி ரமா(வயது40). இவர் வாணரப்பேட்டை கல்லறை வீதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவரின் மனைவி லட்சுமியிடம் மொத்தமாக பணம் வாங்கி அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்து பின்னர் அதனை வசூலித்து லட்சுமியிடம் கொடுத்து வந்தார்.

அதுபோல் கொரோனா காலத்தில் லட்சுமியிடம் ரமா ரூ.5அரை லட்சம் பெற்று அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு வட்டிக்கு கொடுத்தார். ஆனால் பணம் பெற்றவர்கள் கொரோனா காரணமாக திருப்பி கொடுக்கவில்லை. இதனால் ரமா தனது நகையை அடகு வைத்து ரூ.5 லட்சம் லட்சுமியிடம் கொடுத்தார். மீதி 50 ஆயிரத்தை கொடுக்கவில்லை என தெரிகிறது.

இது தொடர்பாக லட்சுமிக்கும், ரமாவுக்கும் அடிக்கடி பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல் லட்சுமி நேற்று பணம் கேட்க ரமா வீட்டுக்கு 2 ஆண் நபர்களுடன் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ரமாவை லட்சுமியும், அவருடன் வந்த 2 பேரும் தாக்கியதாக தெரிகிறது.

அதுபோல் லட்சுமியை ரமா மற்றும் அவரது கணவர் சம்பத் எதிர்வீட்டை சேர்ந்த ஆரோக்கியம்மாள் ஆகிய 3 பேரும் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com