தரைதளம் அமைக்க பூமி பூஜை

காங்- பா.ஜனதா நிர்வாகிகள் பங்கேற்புகாங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தரைதளம் அமைப்பதற்கான பூமி பூஜையை வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.
ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் தரைதளம் அமைப்பதற்கான பூமி பூஜையை வைத்திலிங்கம் எம்.பி, அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தொடங்கி வைத்த காட்சி.
Published on

புதுச்சேரி:

ஊசுடு தொகுதி தொண்டமாநத்தம் கிராமத்தில் தீப ஒளி அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இந்தப் பள்ளியில் வடிகால் வசதி வாய்க்காலுடன் உணவு அறை தரைதளம் அமைக்கும் பணிக்காக புதுவை பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் இந்தப் பணிக்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் நடந்தது.

வைத்திலிங்கம் எம்.பி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முன்னிலை வகித்தார்.

இதில் வடிகால் வசதியுடன் கூடிய தரைதளம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கி வைக்க ப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திகேயன், பா.ஜனதா தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன் காங்கிரஸ் மாநில செயலாளர் ஊசுடு செந்தில்குமார், வட்டார காங்கிரஸ் தலைவர் சங்கர் பாபு, பொதுக்குழு உறுப்பினர் பாபு என்ற பழநிராஜா, பா.ஜனதா நிர்வாகி தொண்டமாநத்தம் தமிழ் உள்ளிட்ட காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com