பெயிண்டருக்கு பீர் பாட்டில் குத்து

6 பேருக்கு வலைவீச்சுகூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை கோலாஸ் நகர் பிரான்சுவா தோப்பு பகுதியை சேர்ந்தவர் எட்டியான் என்ற பவுல்ராஜ் (வயது25). பெயிண்டர். திருமணமாகவில்லை.

இவருக்கும் ராசு உடையார் தோட்டத்தை சேர்ந்த சேது என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டது. இதனால் இருவரும் பார்க்கும் இடங்களில் எல்லாம் தகராறு செய்வது போல் நடந்த கொள்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு எட்டியான் உப்பளம் துறைமுக மைதானத்திற்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு வந்துக் கொண்டி

ருந்தார்.அப்போது அங்கு வந்த சேது, அவரது கூட்டாளி விக்கி மற்றும் அடையாளம் தெரியாத 4 பேர் எட்டியானிடம் தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலால் அவரை குத்தினர். மேலும் கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டினர்.

இந்த தாக்குதலில் காயம் அடைந்த எட்டியான் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் இதுகுறித்து ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்கு பதிவு செய்து சேது உள்பட 6 பேரையும் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com