வியாபாரியை தாக்கி கொலை மிரட்டல்

அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான சின்ன கோட்டக்குப்பம் ஐம்பொன் தெருவை சேர்ந்தவர் வேலாயுதம். (வயது 50) இவர் மொபட் மூலம் டீ வியாபாரம் செய்து வருகிறார்.

அதுபோல் நேற்று காலை வேலாயுதம் வியாபாரத்துக்கு செல்ல முத்தியால் பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்கில் மொபட்டுக்கு பெட்ரோல் நிரப்ப வந்தார். அப்போது முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டி வேலாயுதத்தை தாக்கினார்.

மேலும் மொபட்டையும் அடித்து உடைத்து சேதப்படுத்தினார். அதோடு வேலாயுதத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு முருகன் அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த தாக்குதலில் காயமடைந்த வேலாயுதம் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து வேலாயுதத்தின் மனைவி கிரிஜா கொடுத்த புகாரின் பேரில் முத்தியால் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com