தனியார் மருத்துவமனை ஊழியரை மீது தாக்கி கொலை மிரட்டல்

புதுவை அருகே கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார். திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

அரியாங்குப்பத்தை அடுத்த மணவெளி தண்ணீர் தொட்டி வீதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (வயது 37) இவர் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் அட்டெண்டராக வேலை செய்து வருகிறார்.

மேலும் மணவெளி பகுதியில் உள்ள அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சா யத்து பராமரிப்பில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தை குத்தகை மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தார்.

ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த அய்யனாரப்பன் என்பவரும் சுத்திகரிப்பு நிலையத்தை ஏலம் எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் மண வெளி முத்துமாரியம்மன் கோவில் கூட்டம் நடந்துள்ளது. திருவிழாவில் பொதுமக்களின் வரிப்பணத்தை அய்யனா ரப்பன் முறைகேடு செய்து வருவதாக சரண்ராஜ் என்பவர் அருள்ராஜியிடம் கூறினார் என்று அய்யனாரப்பனுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த அய்யனாரப்பன் அப்பகுதி யைச் சேர்ந்த அருள்ராஜை அசிங்கமாக திட்டி கையால் தாக்கி உள்ளார். பின்னர் நேற்று இரவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை சேதப்படுத்தி அங்கிருந்த கேமராவையும் உடைத்துள்ளார்.

மேலும் இரும்பு கம்பி யால் கொலை செய்து விடுவேன் என அருள்ராஜ் க்கு மிரட்டல் விடுத்தார். இது சம்பந்தமாக அரியாங்

குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரி வித்தார். போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் முருகானந்தம், உதவி சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து அய்யனாரப்பனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com