மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கல்

முத்துரத்தினம் அரங்கம் பள்ளியில் நடைபெற்றது. கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.
 மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்ட காட்சி.
 மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவை கவுண்டன்பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வங்கியின் மூலம் 10-ம் வகுப்பு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கி மாணவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார்.

தலைமை விருந்தினராக பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி தலைமை மேலாளர் ஸ்ரீதர் மற்றும் சிறப்பு விருந்தினராக வங்கியின் முதன்மை அதிகாரி அனுபாமா ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கான வங்கி கணக்கின் அவசியத்தை குறித்து விளக்கம் அளித்தனர்.

புதுவை மாநில ஒருங்கிணைந்த கோரிஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தி பேசினார்.

தொழிலதிபர் சுதாகர், பள்ளியின் முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா டேனியல் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com