காரைக்கால் கோட்டுச்சேரியில் இறுதி ஊர்வலத்தில் சாலை நடுவே ஆடிசென்றவரை தட்டிகேட்டவருக்கு அடி-உதை

மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன் சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது. மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
காரைக்கால் கோட்டுச்சேரியில் இறுதி ஊர்வலத்தில் சாலை நடுவே ஆடிசென்றவரை தட்டிகேட்டவருக்கு அடி-உதை
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தென்கரை பேட்டையைச்சேர்ந்தவர் மூவேந்தன்(வயது30). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது ஊரைச்சேர்ந்த ராமமூர்த்தி இறந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில் ஊர்வலம் சென்றபோது, அவ்வழியே மூவேந்தன் சென்றுள்ளார். அப்போது மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன்(21) , சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த மூவேந்தன் ஏன் சாலை நடுவே ஆடுகிறாய் ஓரமாக சென்று ஆடு என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்பாண்டியன், நீ யார் என்னை கேள்வி கேட்பதற்கு என, கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நேற்று கோட்டுச்சேரி போலீசில் மூவேந்தன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com