மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில விருதுக்கு விண்ணப்பம்

மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி சமூக நலத்துறை இயக்குநர் குமரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆண்டுதோறும் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான புதுவை அரசின் மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி களுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த அரசு துறை, தன்னாட்சி அமைப்பு, உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, மாற்றுத்திறனாளிகளுக்காக வேலைவாய்ப்பு அளிப்பதில் சிறந்த தனியார் நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரியும் மாற்றுத்திறனாளி ஊழியர்கள் அரசு துறை, தன்னாட்சி அமைப்பு உள்ளாட்சி துறை, பொதுத்துறை நிறுவனங்கள் விருது, சிறப்பாக பணிபுரி யும் தனியார் நிறுவன மாற்றுத்திறனாளி ஊழியர்கள் விருது, சிறப்பாக சுய தொழில் செய்யும் மாற்றுத்திறனாளி விருது வழங்கப்படும்.

ஒவ்வொரு விருதுக்கும் சான்றிதழ் வழங்குவது மட்டுமில்லாமல் ரொக்கப் பரிசும் வழங்கப்படும். நடப்பு ஆண்டு மாநில விருதுகளுக்காக தகுதி வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் அல்லது நிறுவனங்களி டமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அனைத்து ஆதார ஆவணங்களுடன் வரும் செப்டம்பர் மாதம் 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள் வந்து சேர வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com