வழிகாட்டும் சாய் பாபா ஆலயத்தில் அன்னாபிஷேகம்

கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம் சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது
சாய் பாபாவுக்கு அன்னாபிஷேகம் நடந்த காட்சி.
சாய் பாபாவுக்கு அன்னாபிஷேகம் நடந்த காட்சி.
Published on

புதுச்சேரி:

கோரிமேடு அருகே பட்டனூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா ஆலயம் உள்ளது.

108 மூலிகையால் காப்பு கண்ட 12 அடி செப்பு கோபுரத்தின் கீழ் கருட கருங்கல்லால் ஆன 6 அடி உயரத்தில் சாய்பாபா சிலை உள்ளது.

இந்த ஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியையொட்டி வழிகாட்டும் சாய்பாபாவை சிவனாக பாவித்து அன்னா பிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் மற்றும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com