ஆதரவற்றோருக்கு அன்னதானம்-நலத்திட்ட உதவிகள்

அ.ம.மு.க. மாநில இணைச்செயலாளர் லாவண்யா வழங்கினார்பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
உப்பளத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட காட்சி.
உப்பளத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள சிறுவர்-சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி மாநில அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யாவின் மகன் சரண்ராஜ் 5-ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி ரெட்டியார் பாளையம் ஜெயா நகரில் நடைபெற்றது.

இதனையொட்டி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர் கருணை இல்லத்தில் காலை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயா நகரில் உள்ள இல்லத்தில் சரண்ராஜ் உருவ படத்திற்கு அ.ம.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு வேட்டி-சேலை, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் உப்பளத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி படித்து வரும் சிறுவர், சிறுமிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் அ.ம.மு.க. தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், இணைச் செயலாளர் லாவண்யா உள்ளிட்ட பலர் பங்கேற்று மதிய உணவு வழங்கினர்.

இதில் எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகிகள் சீத்தாராமன், நிர்வாகிகள் ரகுபதி, ராமச்சந்திரன், சிவக்குமார், கலியமூர்த்தி, தினேஷ், வைத்தியநாதன், உழவர்கரை தொகுதி நிர்வாகிகள் மேல் அமைப்பு பிரதிநிதி லூர்துசாமி, தொகுதி துணைச் செயலாளர் ழில்பேர், சுப்பிரமணி, கில்பர்ட், மோகன்குமார், சபா, சுப்பு, அருண், சூரியா, கவுதம், மணிகண்டன், பாரதிராஜா, சுப்பிரமணி, சூசைராணி, ஜாக்குலின்மேரி, உமா, ரோசலின், கவிதா, எலன் செல்வராணி, இந்துமதி, இன்பம், சந்திரா, சரளா, உமா, திவ்யா, முத்துலட்சுமி, மாலா, மாலதி, சாந்தி, புனிதா, இலக்கியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com