அனைத்து தொகுதியிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை

பா.ஜனதா நிர்வாகிகளிடம் மாநில பொறுப்பாளர் அறிவுறுத்தல்அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மாநில பா.ஜனதா தலைவராக செல்வகணபதி எம்.பி. நியமிக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து புதுவை மாநில பா.ஜனதா வுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக அக்கார்டு ஓட்டலில் புதுவை மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

மாநில தலைவர் செல்வகணபதி எம்பி, முன்னாள் தலைவர் சாமிநாதன், அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் வி.பி. ராமலிங்கம், அசோக்பாபு, கல்யாணசுந்தரம், சிவசங்கரன், வெங்கடேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், அருள்முருகன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் அனைத்து தொகுதிகளிலும் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். பழைய நிர்வாகி களுடன், நியமிக்கப்படும் புதிய நிர்வாகிகள் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும் என நிர்வாகிகளிடம் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com