தொழில் பழகுநர் பயிற்சிக்கு சேர்க்கை முகாம்

சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன. அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை மேட்டுப்பாளையம் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பிரதம மந்திரி தேசிய பழகுநர் சேர்க்கை முகாம் வருகிற 8-ந் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடக்கிறது.

முகாமில், புதுவை மாநிலத்தில் உள்ள மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்துகொள்கின்றன.இந்த வாய்ப்பை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முகாமுக்கு வருபவர்கள் அனைத்து சான்றிதழ்கள், ஆதார்கார்டு நகல், 2 பாஸ்போர்ட் அளவு போட்டோ கொண்டுவர வேண்டும். பயிற்சி பெறுவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு அருகில் உள்ள துணை தொழில் பழகுநர் ஆலோசகர் அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களை அணுகி விபரங்களை அறியலாம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com