டிஜிட்டல் பேனர்களை அணிந்து ஆம் ஆத்மி நூதன போராட்டம்

ஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.
ஆம் ஆத்மி கட்சியினர்  நூதன போராட்டத்தை நடத்திய காட்சி.
ஆம் ஆத்மி கட்சியினர்  நூதன போராட்டத்தை நடத்திய காட்சி.
Published on

புதுச்சேரி:

புதுவையில் பேனர் தடை சட்டம் இருந்தாலும் சாலை யோரங்கள் தொடங்கி சிக்னல்களை மறைத்து டிஜிட்டல் பேனர்கள் அதிக ளவில் வைக்கப்படுகின்றன.

டிஜிட்டல் பேனர்களால் நகரின் அழகு குறைந்தாலும், அதிகாரிகள் எவ்வித நட வடிக்கையும் எடுப்பதில்லை.

இதையடுத்துஆம் ஆத்மி கட்சியினர் இன்று நூதன போராட்டத்தை நடத்தினர்.

டிஜிட்டல் பேனர்களை சட்டையாக அணிந்து தலைவர்களின் பிறந்தநாள் எங்களுக்கு இறந்த நாளா? தலைவர்களே சிந்தியுங்கள். என்ற வாசகத்துடன் சிங்கார சிலையிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பயணம் காமராஜர் சிலை முன்பு முடிவடைந்தது.

முடிவாக சிங்காரவேலர், காமராஜர், அண்ணா, உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து போராட்டத்தை நிறைவு செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com