காரைக்காலில் இளம்பெண் மாயம்

தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம்.இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.
காரைக்காலில்  இளம்பெண் மாயம்
Published on

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த நாகை மாவட்டம் திட்டச்சேரி வாணியத்தெருவை ச்சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் சத்தியவாணி (வயது24) என்பவர், காரைக்கால் நேரு வீதியில் உள்ள பிரபல பர்னிச்சர் கடையில் கடந்த 4 மாதங்களாக வேலை செய்து வருகிறார்.

இவர் வழக்கமாக தன்னுடன் வேலைபார்க்கும் அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ்யா என்பவருடன் வேலைக்கு செல்வது வழக்கம். கடந்த 4-ந் தேதி வழக்கம் போல், இருவரும் வேலைக்கு சென்றனர். அப்போது, அதே கடையில் வேலை செய்யும் ஓடுதுறையைச்சேர்ந்த சினேகா என்பவரையும் ஸ்கூட்டியில் ஏற்றிகொண்டு கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மாலை 5 மணிக்கு, தந்தை சங்கர் சத்தியவாணிக்கு போன் செய்தபோது, போன் சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. தொடர்ந்து, சங்கர் பல இடங்களில் தேடியும் சத்தியவாணி குறித்து தகவல் தெரியாததால், காரைக்கால் நகர போலீசில் புகார் கொடுத்தார். இது குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான சத்தியவாணியை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com