தவறி விழுந்த பெண் காய்கறி வியாபாரி பலி

புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு. அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

வேக தடையில் ஏறி இறங்கிய போது மினி வேனில் இருந்து தவறி விழுந்த பெண் காய்கறி வியாபாரி பலியானார்.

புதுவை தவளக்குப்பம் பூரணாங்குப்பம் மெயின் ரோடு குளக்கரை பகுதியை சேர்ந்தவர் தரணிசிங்கு. இவரது மனைவி கல்யாணி (வயது65). இவர் தவளக்குப்பத்தில் காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். இவர் மினிவேனில் புதுவை உழவர் சந்தைக்கு சென்று மொத்தமாக காய்கறி வாங்கி வந்து விற்பனை செய்வது வழக்கம்.

அதுபோல் கல்யாணி காய்கறி வாங்க உழவர் சந்தைக்கு மினிவேனில் வந்தார். புதுவை-கடலூர் சாலையில் கோர்ட்டு வளாகம் எதிரே உள்ள வேகதடையில் மினிவேன் அதிவேகமாக ஏறி இறங்கிய போது எதிர்பாராத விதமாக கல்யாணி தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த கல்யாணியை மினிவேன் டிரைவர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி  கல்யாணி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து அவரது மகன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com