கோப்பு படம்.
கோப்பு படம்.

திருமண நாளில் மயங்கி விழுந்து இறந்த பெண்

செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ்.ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.
Published on

புதுச்சேரி:

செங்கல்பட்டு என்.ஜி.ஓ.நகரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டெக்னீசியனாக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கும் புதுவை உருளையன்பேட்டை ஒத்தவாடை வீதியை சேர்ந்த ரேவதி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ரேவதி இதய நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் உருளையன்பேட்டையில் உள்ள தாய் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ரமேஷ் மனைவியை பார்த்து செல்வார்.

இந்த நிலையில் நேற்று திருமண நாளையொட்டி ரமேஷ் மனைவியை பார்க்க தனது மாமியார் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் அறையில் ரேவதி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ரேவதியை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரேவதி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது கணவர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நாளில் பெண் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்ததை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com