சாமி கும்பிட்டபோது சேலையில் தீப்பிடித்து பெண் பலி

கிருத்திகை தினத்தையொட்டி பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி, தவளக்குப்பம், மூகாம்பிகை நகர், 5-ஆவது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி.

இவரது மனைவி பத்மசுந்தரி இவர்களுக்கு பாலமுருகன்.  கவிராஜ் ஆகிய இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இந்த நிலையில் பத்மசுந்தரி சம்பவத்தன்று கிருத்திகை தினத்தையொட்டி  பூஜை அறையில் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது சேலையில் தீப்பற்றியது. உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசுஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை யில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பத்மசுந்தரி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து அவரது கணவர் கிருஷ்ண மூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com