கோப்பு படம்.
கோப்பு படம்.

நள்ளிரவில் அறுந்து விழுந்த மின் கம்பி

துரித நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதுபொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.
Published on

புதுச்சேரி:

மதகடிப்பட்டு பாளையத்தில் கஸ்தூரிபாய் நகர் பிள்ளையார் கோவில் தெருவில் கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் அங்கு எதிர்பாரதவிதமாக நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்தது. நள்ளிரவில் அறுந்து விழுந்த மின்சார கம்பியால் அவழியாக பொதுமக்கள் யாரும் செல்லாததால் உயிர் சேதம் தடுக்கப்பட்டது.

அதிகாலை 4 மணிக்கு தனது மகனை ஹாக்கி பயிற்சிக்காக அழைத்துச் சென்ற பைக் மெக்கானிக் ரமேஷ் என்பவர் மின் கம்பி அறுந்து கிடப்பதை கண்டார்.

உடனே அவர் அப்பகுதியில் உள்ள இளைஞர்களை அழைத்து மரக்கிளைகள் மற்றும் தனது பைக் வாகனத்தையும் சாலையின் குறுக்கே நிறுத்தி பொதுமக்கள் சாலையில் உள்ள மின்கம்பியை மிதிக்காமல் செல்ல எச்சரிக்கையை ஏற்படுத்தினார்.

அதனைத் தொடர்ந்து திருபுவனை மின்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. மின்துறையினர் அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மீண்டும் இணைத்தனர். அவர் துரிதமாக செயல்பட்ட தால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com