கோவில் சொத்துக்களுக்கு பூஜ்ய மதிப்பு அளிக்க வேண்டும்

வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவை காமாட்சியம்மன் கோவில் நில அபகரிப்பு தொடர்பாக சார்பதிவாளர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் பின்னணியில் உள்ளவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் நில அபகரிப்பை தடுக்க கோவில் சொத்துக்களுக்கு பூஜ்ய மதிப்பை வழங்க வேண்டும். அப்போதுதான் கோவில் சொத்து அபகரிப்பை தடுக்க முடியும்.

காலாப்பட்டு பிள்ளைச்சாவடியில் கடல் அரிப்பால் தொடர்ந்து மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை தடுக்க அப்பகு தியில் கற்களை கொட்டி கடல் அரிப்பை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com