அரசு ஊழியரை கத்தியால் குத்திய மர்ம கும்பல்

புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன்புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை அம்பேத்கார் நகர் அரசு ஊழியர் குடியிருப்பை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவர் புதுவை போக்குவரத்து துறையில் அமலாக்கத்துறை உதவியாளராக வேலை செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி அவருக்கு தோள்பட்டையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் மருத்துவ விடுப்பில் இருந்த முத்துக்குமரன் நேற்று முன்தினம் பணிக்கு திரும்பினார். அன்று மாலை பணி முடிந்து தனது மைத்துனர் முருகன் என்பவரின் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

முதலியார்பேட்டை கடலூர் ரோடு ஆலை ரோடு சந்திப்பில் வந்தபோது 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் திடீரென முத்துக்குமரனையும், அவரது மைத்துனரையும் வழிமறித்து இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர்.

மேலும் அந்த கும்பலில் ஒருவன் மறைத்து வைத்தி ருந்த பேனா கத்தியை வைத்து முத்துக்குமரனின் காதில் குத்தினான். பின்னர் அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயம் அடைந்த முத்துக்குமரன் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிக்சை பெற்றார்.

பின்னர் இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமரனையும் அவரது மைத்துனரையும் தாக்கிய கும்பல் யார்? அவர்கள் எதற்காக தாக்கினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com