அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலி

மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

மோட்டார் சைக்கிள் தடுப்பு கட்டையில் மோதிய தில் அரசு ஆஸ்பத்திரி ஊழியர் பலியானார்.

புதுவை சாரம் வெங்கடேஸ்வராநகர் அவ்வை வீதியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி. இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு வானொலி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

சம்பவத்தன்று பணியில் இருந்த தட்சணாமூர்த்தி டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் செஞ்சி சாலை வழியே சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க தட்சணாமூர்த்தி மோட்டார் சைக்கிளை திருப்பினார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அருகில் இருந்த தடுப்பு கட்டையில் மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்ட தட்சணாமூர்த்தி தலையில் பலத்த காயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த தட்சணாமூர்த்தி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்த புகாரின் பேரில் புதுவை போக்குவரத்து உதவி சப்-இன்ஸ்பெக்டர் வேணுகோபால் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com