பழிக்கு பழி தீர்க்க பிரபல ரவுடியை தேடி வந்த 9 பேர் கும்பல்

வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்புஅம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற அப்பாச் பிரகாஷ்.

இவர் மீது கொலை, வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் கோபாலன்கடை அருகே உள்ள அம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மா நகர் ராஜாவின் கொலைக்கு பழி தீர்க்க சம்பவத்தன்று அப்பாச் பிரகாஷை தீர்த்துக்கட்ட ரவுடி ராஜாவின் கூட்டாளிகளான முத்துப்பிள்ளை பாளை யத்தைச்சேர்ந்த மணி என்கிற மாறு மணி, தினேஷ், பாண்டி, கணுவாப் பேட்டையை சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 9 பேர் வாழப்பட்டாம் பாளையம் சென்று ரவுடி அப்பாச் பிரகாஷை ஆயுதங்களுடன் தேடி உள்ளனர்.

அப்போது அவர் இல்லாததால் அவரது உறவினரான மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் சக்திவேல் மகன் பிரதாப் (வயது 22) என்பவரை வழிமறித்து அப்பாச் பிரகாஷ் குறித்து தகவலை கேட்டுள்ளனர். அவர், 'எதுவும் தெரியாது நான் டீக்கடை நடத்தி வருகிறேன். அப்பாச்சி பிரகாஷ் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பிரதாப் பொய் சொல்வதாக கருதிய அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியது. இதில் பிரதாப்புக்கு காயம் ஏற்பட்டது.

பின்னர் பிரதாப் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் மாறு மணி தலைமையிலான கும்பல் பறித்து சென்றது. பலத்த காயமடைந்த பிரதாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பிரதாப்பை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மாறுபணி, தினேஷ், பாண்டி, அசாருதீன் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com