மாமனாரை தாக்கி 3 வயது குழந்தையை தூக்கிச் சென்ற தந்தை

2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

சென்னை வில்லிவாக்கம் ராஜா நகரை சேர்ந்தவர் சம்பத்குமார் மகன் தினேஷ். இவருக்கும் காலப்பட்டு சாந்தி நகரை சேர்ந்த லோகநாதன் மகளுக்கும் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது. குழந்தை பிறந்தவுடன் தினேசின் மனைவி இறந்துவிட்டார். இதனால் தினேஷ் குடும்பத்திற்கும் லோகநாதன் குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 2 குடும்பத்தில் இருக்கும் நடக்கும் பிரச்சினை குறித்து கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த3 ஆண்டுகளாக குழந்தை லோகநாதன் பராமரிப்பில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் தினேஷ் தனது நண்பர்களுடன் நேற்று காலாப்பட்டு வந்தார். அங்குள்ள முருகன் கோவில் வாசலில் லோகநாதன் குழந்தையை தூக்கி வர சொன்ன தினேஷ் சிறிது நேரம் குழந்தையை கொஞ்சி கொண்டு இருந்தார்.

பின்னர் குழந்தையை தரச் சொல்லி லோகநாதன் கேட்கவே தினேசுக்கும் லோகநாதனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது தினேஷ் மற்றும் அவரது நண்பர்கள் லோகநாதனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து குழந்தையை அங்கிருந்து தூக்கிச்சென்று விட்டனர்.

இதுகுறித்து லோகநாதன் கொடுத்த புகாரின் பேரில் காலாப்பாட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ விசாரனை நடத்தி தினேஷ் உள்ளிட்ட அவரது நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com