புதுவையில் 213 பேருக்கு கொரோனா தொற்று

புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் படிப்படியாக கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது. புதுவையில் 2 ஆயிரத்து 240 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 174, காரைக்காலில் 36, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என புதிதாக 213 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் 11, ஏனாமில் ஒருவர் என 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுவையில் 898, காரைக்காலில் 118, ஏனாமில் 24 பேர், மாகியில் ஒருவர் என ஆயிரத்து 36 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர்.

புதுவையில் 159, காரைக்காலில் 19, ஏனாமில் 2, மாகியில் ஒருவர் என 181 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். மாநி லத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 59 ஆயிரத்து 665 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இந்த தகவலை சுகாதாரத்துறை தெரி வித்துள்ளது. புதுவையில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவது பொது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com