காதல் ஜோடி தங்கிய அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த 2 பேர் கோவாவில் கைது

கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
காதல் ஜோடி தங்கிய அறையில் ரகசிய கேமரா பொருத்தி படம் பிடித்த 2 பேர் கோவாவில் கைது
Published on

புதுச்சேரி:

புதுச்சேரி 100 அடி ரோட்டில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி அறை எடுத்து தங்கினர்.

அப்போது அந்த விடுதி படுக்கை அறையில் எலெக்ட்ரிக்கல் சுவிட்ச் பாக்சில் இன்டர்காம் பிளக் பாயின்டில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு காதல் ஜோடியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து காதல் ஜோடியினர் உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் விடுதி அறையில் சோதனை செய்தபோது பல காதல் ஜோடிகள் தனிமையாக இருந்ததை வீடியோ எடுத்திருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கம்ப்யூட்டர், சி.பி.யூ. கேமரா ஆன்லைன் வழியாக வீடியோ அனுப்பும் கருவி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார் மற்றும் விடுதி மேலாளர் இருதய ராஜ் ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் விடுதி அறையில் ரகசிய கேமரா பொருத்தி வீடியோ எடுத்தது விடுதி ஊழியர்களான தேங்காய் திட்டு வசந்தம் நகரை சேர்ந்த ஆனந்து (25), அரியாங்குப்பம் ஓடைவெளி பகுதியை சேர்ந்த ஆபிரகாம் (21), என்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

இதையடுத்து விடுதி உரிமையாளர் இளைய ஆழ்வார், விடுதி மேலாளர் இருதயராஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளான ஆனந்து, ஆபிரகாம் ஆகியோரை போலீசார் தேடி வந்த நிலையில் அவர்கள் கோவாவில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.

போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று 2 பேரையும் கைது செய்தனர்.

அவர்களை புதுவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com