புதுவையில் 174 பேருக்கு கொரோனா தொற்று

புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

புதுவையில் 2 ஆயிரத்து 341 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் புதுவையில் 143, காரைக்காலில் 25, ஏனாமில் 6 பேர் என புதிதாக 174 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 6, ஏனாம் 4, மாகியில் ஒருவர் என 11 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுவையில் 762, காரைக்காலில் 119, ஏனாமில் 22 பேர், மாகியில் ஒருவர் என 904 பேர் தொற்றுடன் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவையில் 132, காரைக்காலில் 34, ஏனாமில் 82 பேர் என 174 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர். மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 962 ஆக உள்ளது. புதுவையில் 2வது தவணை, பூஸ்டர் டோஸ் உட்பட 17 லட்சத்து 58 ஆயிரத்து 319 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா நெறிமுறை களை தொடரவும், அனைவரும் முக கவசம் அணியவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com