எலக்ட்ரானிக் கடை உரிமையாளரிடம் ரூ.15 லட்சம் மோசடி

புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீஇவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை காமராஜர் நகர் சவுந்தரராஜன் வீதியை சேர்ந்தவர் சுபஸ்ரீ. இவர் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன்னர் இவருடைய செல்போனில் தஞ்சாவூரை சேர்ந்த ரமேஷ் சத்யம் என்பவர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் எலக்ட்ரானிக் பொருட்களை குறைந்த விலைக்கு அனுப்புவதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ராஜேந்திரன், அவரது மனைவி தேன்மொழி ஆகியோரும் சுபஸ்ரீயுடன் தொடர்பு கொண்டு அடுத்தடுத்து பேசியுள்ளனர், இதனை நம்பிய சுபஸ்ரீ ரூ.15 லட்சம் அவரது வங்கி கணக்கில் இருந்து அனுப்பியுள்ளார்.

ஆனால், அவர்கள் கூறியது போல எலக்ட்ரானிக் பொருட்களை அனுப்பவில்லை. அவர்கள் பணத்தை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து சுபஸ்ரீ பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். பெரியக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் சத்யம், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி தேன்மொழி ஆகிய 3 பேரையும் தேடிவருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com