100-வது நாளாக பாசிக் ஊழியர்கள் போராட்டம்

பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்., ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

பாசிக் தொழிலாளர்க ளுக்கு வழங்கவேண்டிய 116 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்க ளுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளத்தை வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று 100-வது நாளாக பாசிக் ஊழியர்களின் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி.மாநில பொருளாளர் அந்தோணி, துணைத்தலை வர்கள் சந்திரசேகர், சேகர், மாநில செயலாளர் துரை செல்வம், தயாளன், மூர்த்தி, பாஸ்கர பாண்டியன், மாநில நிர்வாக குழு உறுப்பி னர்கள் பூபதி, ஜீவானந்தம், சண்முகம், மாரிமுத்து, பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி,கோவிந்தராசு, மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குண சீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com