கோவில் திருப்பணிக்கு ரூ.1¾ லட்சம் நிதி

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது
ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கிய காட்சி.
ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கிய காட்சி.
Published on

புதுச்சேரி:

உப்பளம் தொகுதி வாணரப்பேட்டையில் வலம்புரி சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக முதல் கட்டமாக ஏற்கனவே இந்து அறநிலைத்துறை மூலம் ரூ. 1¾ லட்சம் நிதியை கென்னடி எம்.எல்.ஏ. பெற்று தந்தார்.

இந்த நிலையில் 2-வது கட்டமாக கோவில் திருப்பணிக்கு நிதி வழங்க வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை விடுத்தார். அதன்படி 2-வது கட்டமாக ரூ. 1¾ லட்சத்திற்கான காசோலையை முதல்-அமைச்சர் ரங்கசாமி கென்னடி எம்.எல்.ஏ.விடம் வழங்கினார்.

இதனை கோவில் திருப்பணிக்குழு வினரிடம் கென்னடி எம்.எல்.ஏ. அளித்தார். நிகழ்ச்சியின் போது கோவில் நிர்வாகக்குழு கலியபெருமாள் செயலாளர் விஜயன், பொருளாளர் வாசு தொகுதி தி.மு.க. செயலாளர் சக்தி வேல் துணைச்செயலாளர் ராஜி, கிளைச்செயலாளர் செல்வம் மற்றும் காத்தலிங்கம், ராகேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com