நாளை போராட்டம்: புதுச்சேரியில் கவர்னர் மாளிகை முன்பு பாதுகாப்புப்படை குவிப்பு

கிரண் பெடிக்கு எதிராக நாளை காங்கிரஸ் மற்றும் திமுக போராட்டம் நடத்த இருக்கும் நிலையில், கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புப்படை
பாதுகாப்புப்படை
Published on

புதுச்சேரியில் கவர்னர் கிரண்பெடிக்கும் முதலமைச்சர் நாராணயசாமி தலைமையிலான அரசுக்கும் இடையில் பனிப்போர் நிலவி வருகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று மாநில முதல்வர் நாராயணசாமி கிரண்பெடி மீது குற்றம்சாட்டி வருகிறார். அதேவேளையில் எனது அதிகார வரம்பிற்குள்தான் செயல்படுகிறேன் என கிரண்பெடி கூறிவருகிறார்.

புத்தாண்டு கொண்டாட நாராயணசாமி தலைமையிலான அரசு அனுமதித்த போதிலும், கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்ததோடு, தடைவிதித்தார். பொங்கல் பரிசு கொடுப்பதில் முட்டுக்கட்டை போட்டார்.

இந்த நிலையில் நாளை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் இணைந்து கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால் கவர்னர் மாளிகை முன் பாதுகாப்புப்படை குவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com