படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

லாஸ்பேட்டை அருகே படிப்புக்கேற்ற வேலைகிடைக்காத விரக்தியில் இளம் பெண் தூக்குபோட்டு இறந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
படிப்புக்கேற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

லாஸ்பேட்டை கருவடிக்குப்பம் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் (வயது44). கொத்தனார். இவருடைய மகள் பிரியங்கா (18). இவர் டிப்ளமோ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஷோரூமில் வேலைபார்த்து வந்தார். பின்னர் அந்த வேலை பிடிக்கவில்லை என்று கூறி வேலையில் இருந்து நின்று விட்டார். படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை என்று மனவருத்தத்தில் இருந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஜன்னலில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் இருந்து மற்றொரு மகளை சாப்பிட முருகன் வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது மகள் பிரியங்கா தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தூக்கில் இருந்து மகள் பிரியங்காவை மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே பிரியங்கா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் இதுகுறித்து முருகன் லாஸ்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் அம்மாசாமி மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து பிரியங்கா சாவுக்கு வேறு ஏதேணும் காரணம் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com