டீக்கடை ஊழியர் தற்கொலை - மதுகுடித்ததை மனைவி கண்டித்ததால் துயர முடிவு

முத்தியால்பேட்டையில் மதுகுடித்துவிட்டு வந்ததை மனைவி கண்டித்ததால் டீக்கடை ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

புதுச்சேரி:

முத்தியால்பேட்டை புதுத்தெருவை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது52). இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள டீக்கடையில் ஊழியராக வேலைபார்த்து வந்தார். இவருக்கு லட்சுமி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

சிவசங்கருக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் டீக்கடைக்கு வேலைக்கு செல்வதாக சிவசங்கர் கூறி சென்றார். ஆனால் பந்த் போராட்டத்தை யொட்டி டீக்கடை அடைக்கப்பட்டு இருந்ததால் சிவசங்கர் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு சென்றார்.

இதனை அவரது மனைவி லட்சுமி கண்டித்த போது, அவரையும் மகள்களையும் தகாத வார்த்தைகளால் சிவசங்கர் திட்டினார். பின்னர் அவர் படுக்கைஅறைக்கு சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். சந்தேகம் அடைந்த அவரது மனைவி லட்சுமி கதவை தட்டிய போது கதவு திறக்கப்படவில்லை.

இதையடுத்து லட்சுமி இதுபற்றி தனது மகன் ஜெகதீசனுக்கு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கதவை உடைத்து பார்த்த போது சிவசங்கர் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு திடுக்கிட்டார்.

பின்னர் இதுகுறித்து ஜெகதீசன் முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com