ரெட்டியார்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

ரெட்டியார்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையத்தில் கட்டிட தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

புதுவை சண்முகாபுரம் அண்ணாவீதியை சேர்ந்தவர் அற்புதராஜ் (வயது50), கட்டிட தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும், 2 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். மதுகுடிக்கும் பழக்கம் உள்ள அற்புதராஜிக்குஇந்த பழக்கத்தினால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஆனால் அற்புதராஜ் தொடர்ந்து மதுகுடித்து வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்த போது அற்புதராஜ் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து ரெட்டியார்பாளையம் புதுநகரில் உள்ள தனது தங்கை ரோசி வீட்டில் தங்கி இருந்து வந்தார்.

ஏற்கனவே உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை விட்டு பிரிந்ததால் அற்புதராஜ் மனவேதனையில் இருந்து வந்தார். இதனால் மனமுடைந்த அற்புதராஜ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று அவரது தங்கை ரோசி வெளியே சென்ற வேளையில் அற்புதராஜ் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

சிறிது நேரம் கழித்து ரோசி வீட்டுக்கு வந்த போது அங்கு அற்புதராஜ் தூக்கில் தொங்குவதை கண்டு திடுக்கிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் இருந்து அற்புதராஜை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அற்புதராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com