

சென்னை:
புதுப்பேட்டையை சேர்ந்தவர் செந்தில்குமார். சோலார் சிஸ்டம் பொருத்தும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர் பெரம்பூர் போலீசில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-
எனது நிறுவனத்தில் பொழிச்சலூரை சேர்ந்த சரண்யா, பம்மலை சேர்ந்த அனிதா ஆகியோர் கடந்த 2017-ம் ஆண்டு முதல் வேலை பார்த்து வந்தனர். இவர்களில் அனிதா ரூ. 10½ லட்சமும், சரண்யா ரூ. 12½ லட்சமும் கையாடல் செய்து உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி இருந்தார்.
இது தொடர்பாக சரண்யா, அனிதாவை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.