புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேர் கைது

புதுப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது
கைது
Published on

புதுப்பேட்டை:

புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் தீபன், செல்வம் மற்றும் போலீஸ்காரர்கள் ராஜா, கவிராஜா, கணேசமூர்த்தி ஆகியோர் வாணியம்பாளையம், பண்டாரகோட்டை, கோட்டலாம்பாக்கம், புதுப்பேட்டை கடைவீதி ஆகிய பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது தொடர்பாக வாணியம்பாளையத்தை சேர்ந்த முருகன் (வயது 52), பண்டரக்கோட்டை பாபு (46), சிவலிங்கம் (65), கோட்லாம்பாக்கம் ராஜேந்திரன் (46), புதுப்பேட்டை குணசேகரன் (43) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com