

ஜம்மு:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் நேரு பூங்கா பகுதியில் ஏரிக்கரையோரத்தில் குல்ஷன் புக்ஸ் என்ற பெயரில் பிரபல பதிப்பகத்தின் புத்தக கடை அமைந்துள்ளது. நூல் நிலையமாகவும் பயன்படுத்தப்படும் இந்த கடைக்கு வருபவர்கள் அங்குள்ள கேண்டீனில் டீ அல்லது காபியை வாங்கி பருகியபடி தங்கள் மனதுக்கு பிடித்த புத்தகத்தை தாங்கள் விரும்பிய நேரம்வரை வாசித்துவிட்டு செல்லலாம்.
சுமார் 90 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்த கடையில் காஷ்மீரைப் பற்றிய வரலாறு, இலக்கியம் மற்றும் பிரபல எழுத்தாளர்கள், வளரும் நிலையில் உள்ள அறிமுக எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் உருவான ஏராளமான புத்தகங்கள் பகுதிவாரியாக வைக்கப்பட்டுள்ளன.
ஷேக் முஹம்மது உஸ்மான் சன்ஸ் என்ற குழுமத்தால் ஐந்தாவது தலைமுறையாக இயங்கிவரும் இந்த புத்தக கடையில் உள்ள சுமார் 80 ஆயிரம் புத்தகங்களால் 2018-ம் ஆண்டுக்கான லிம்கா உலக சாதனை பட்டியலில் குல்ஷன் புக்ஸ் இடம்பிடித்துள்ளது. #tamilnews #limcabook