டாஸ்மாக்கடையை மூடக்கோரி சாலையில் உருண்டு பொதுமக்கள் போராட்டம்

பாவூர்சத்திரம் அருகே டாஸ்மாக்கடையை மூடக்கோரி போராட்டத்தின் 7-வது நாளான நேற்று டாஸ்மாக்கடை முன்பு உள்ள சாலையில் உருண்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
டாஸ்மாக் கடைக்கு எதிராக தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை படத்தில் காணலாம்.
Published on

நெல்லை:

பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில், அரியப்புரம் செல்லும் வழியில் அரசு டாஸ்மாக்கடை அமைந்துள்ளது. இக்கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில நாட்களாக கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடையின் எதிரே பந்தல் அமைத்து தினமும் அங்கு சமையல் செய்து சாப்பிட்டு வருகின்றனர்.

மதுபாட்டில்களை வைத்து ஒப்பாரி வைத்தும், பாடை கட்டி இறுதி ஊர்வலம் நடத்தியும் அப்பகுதி கிராம மக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தி வரும் இடத்தின் அருகில் தூக்கு மேடை அமைத்து பெண்கள் தங்கள் கழுத்தில் தூக்கு கயிறு மாட்டி நூதன போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தின் 7-வது நாளான நேற்று டாஸ்மாக்கடை முன்பு உள்ள சாலையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com