ஆலங்குடி அருகே பொது இடத்தில் தாக்கியதால் கல்லூரி முன்னாள் நிர்வாகி தற்கொலை

ஆலங்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கல்லூரி முன்னாள் நிர்வாகியை 2 பேர் தாக்கியதால் அவமானம் அடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஆலங்குடி அருகே பொது இடத்தில் தாக்கியதால் கல்லூரி முன்னாள் நிர்வாகி தற்கொலை
Published on

ஆலங்குடி:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பாச்சிக்கோட்டையை சேர்ந்தவர் கணேசன் (வயது 49). பாச்சிக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் பங்குதாரரான இவர், பாச்சிக்கோட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் கல்வி மேலாண்மை குழு தலைவராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் மழையூரை சேர்ந்த குமார் மற்றும் கருப்பட்டிப்பட்டி மேட்டுப்பட்டியை சேர்ந்த அன்பழகன் ஆகிய 2 பேரும் கணேசனை தாக்கியுள்ளனர்.

பொது இடத்தில் வைத்து தாக்கியதால் அவமான மடைந்த கணேசன் வி‌ஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை உறவினர்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com