

பாலக்கோடு:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி ஊராட்சி மற்றும் பாலக்கோடு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் மற்றும் கழிவுநீர் காலம் காலமாக இருக்க கூடிய நீர்வழிபாதை கால்வாயில் சென்றால் தாமரை ஏரிக்கு சென்றடையும். மேலும் சின்னாற் றில் இருந்து பொது பணித்துறைக்கு செந்தமான ஜெர்த்தலாவ் ஏரி இடது புறகால்வாயில் இருந்து தருமபுரிக்கு செல்லும் பொதுபணித்துறை கால்வாயில் இருந்து மதகு வழியாக புங்குட்டை ஏரி, மன்னார்குட்டை ஏரி நிரம்பி வெளியேரும். இந்த தண்ணீர் கால்வாய் மூலம் மழைநீர் தவளாய்அள்ளி, புதூர், மூங்கப்பட்டிபாலம், அண்ணாநகர், பாலக்கோடு பகுதியில் கழிவுநீர் ஆகியவை இணைந்து அரசு பேருந்து பணிமனை முன்பு உள்ள நீரோடை கால்வாய் வழியாக தாமரை ஏரிக்கு பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது.
தற்போது நீரோடை கால்வாய் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வீட்டுமனைகள் மற்றும் விவசாய நிலங்களாக மாற்றியதால் மழைநீர் மற்றும் கழிவுநீர் வெளியேர முடியாமல் குடியிருக்கும் வீடுகளிலும், சுடுகாடு மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் தாறுமாறாக நீர் வெளியேறுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் நீரோடை கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதியில் மழைநீர் விவசாய நிலத்திலும், வீடுகளிலும் தஞ்சம் அடைந்துள்ளது.
இதனால் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் ஏற்படுவது மட்டுமின்றி மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற் கொண்டு கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.