ஆமூர் பஞ்சாயத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஆமூர் பஞ்சாயத்தை விழுப்புரம் மாவட்டத்துடன் இணைக்கக்கோரி 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆமூர் பகுதி பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆமூர் பகுதி பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Published on

திருவெண்ணைநல்லூர்:

விழுப்புரம் மாவட்டம் 2 ஆக பிரிக்கப்பட்டு கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு மற்றொரு மாவட்டம் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள ஆமூர் பஞ்சாயத்தானது கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆமூர் பஞ்சாயத்தை திருவெண்ணைநல்லூர் தாலுகாவுடன் இணைத்து விழுப்புரம் மாவட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.

அவர்கள் தங்களது கைகளில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியபடி அந்த பகுதியில் பேரணியாக சென்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com