மம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள் - போராட்டம் தொடரும் என அறிவிப்பு

மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மம்தாவின் சமாதான அழைப்பை நிராகரித்த டாக்டர்கள் - போராட்டம் தொடரும் என அறிவிப்பு
Published on

கொல்கத்தா:

மேற்கு வங்காளம் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் கடந்த 11-ம் தேதி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி டாக்டர்களை கொடூரமாக தாக்கினர்.

இதைக் கண்டித்து கடந்த 12-ம் தேதி முதல் அரசு டாக்டர்கள் போராட்டத்தில் இறங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.

இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 100-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.

மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.

இந்நிலையில், மம்தா பானர்ஜியின் கோரிக்கையை ஏற்க மறுத்த டாக்டர்கள், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்து 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி விடுத்த அழைப்பை நிராகரித்துள்ள அரசு மருத்துவர்கள், மம்தா பானர்ஜி முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com