

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுமி அப்பகுதியில் உள்ள அல்கான் பப்ளிக் பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வந்தார். இவர், நேற்று முன் தினம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளியில் ஆசிரியர்கள் தொந்தரவு செய்ததால் தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தந்தை புகார் அளித்தார்.
ஆசிரியர்கள் தன் மகளை தவறான நோக்கத்தில் தொட்டதாகவும், இரண்டு பாடங்களில் தோல்வியடைய செய்தாகவும் அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்பட வில்லை. அதனால் இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என மாணவியின் தந்தை அல்கான் பப்ளிக் பள்ளி முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவருடன் ஏராளமான பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் செய்து வருகின்றனர்.
மாணவியின் தந்தையின் குற்றச்சாட்டை பள்ளி நிர்வாகம் மறுத்துள்ளது. மாணவி தேர்வில் தோல்வியடைந்ததால் தான் தற்கொலை செய்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் அவளிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை எனக்கூறியுள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் தற்கொலை குறித்து விசாரணைக்கு டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. #Noida #tamilnews