

எந்தவொரு எதிர்ப்பு வந்தாலும் போட்டி நடந்தே தீரும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போட்டியை காண ரசிகர்கள் அண்ணாசாலை வழியாக மைதானம் வந்த வண்ணம் உள்ளனர். அண்ணாசாலையில் இருந்து போலீசார் பாதுகாப்பிற்கு குவிக்கப்பட்டுள்ளனர். அண்ணா சாலையைத்தாண்டி சேப்பாக்கம் மைதானம் நோக்கி செல்லும் சாலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் அண்ணாசாலையில் சீமான் தனது கட்சித் தொண்டர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஐபிஎல் போட்டியை காண வரும் ரசிகர்களுக்கு கடும் கட்டுப்பாடு விதித்ததும், அண்ணாசாலையில் போலீசார் குவிக்கப்பட்டதும் போராட்டத்திற்கான வெற்றி என்றார்.