போலீஸ் என கூறி பணம் வசூலித்த விபசார புரோக்கர்கள் கைது

போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கிய விபச்சார புரோகர்களை கைது செய்த போலீசார் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்களை மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
போலீஸ் என கூறி பணம் வசூலித்த விபசார புரோக்கர்கள் கைது
Published on

போரூர்:

விபசார தடுப்பு பிரிவு போலீஸ் என கூறி சிலர் பணம் பறிப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 2பேரை இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் 2 பெண்களை தனியார் விடுதியில் தங்க வைத்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதுதவிர விபசார தொழில் செய்து வரும் சிலரிடம் தாங்கள் விபச்சார தடுப்பு போலீசார் என கூறி மிரட்டி பணம் வாங்கி வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் பெயர் வினோத்(32), நரேஷ்(24) என்பது தெரியவந்தது. விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள் இருவரையும் மீட்டு அரசு காப்பகத்தில் சேர்த்தனர். #tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com